நடிகர் சிவகார்த்திகேயன் “கஜா” புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 20 இலட்சம் வழங்கினார்.

கடந்த வாரம் தமிழகத்தையே புரட்டி போட்டது கஜா புயல், அதிலும் டெல்டா மாவட்டங்களையே தலைகீழாக புரட்டிப்போட்டது. அதனால் பாதிக்கட்டவர்களுக்கு, அரசு ஒருபுறமும், தன்னார்வ தொண்டர்கள் மறுபுறமும், சினிமா பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார்கள்.

Sivakarthikeyan-1
Sivakarthikeyan-Gaja-Cyclone-Relief

நேற்று, நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினார். இது மட்டுமில்லாமல் மேலும் 10இலட்சத்திற்க்கான நிவாரண பொருட்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தன்னுடைய ரசிகமன்றங்கள் சார்பாக வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மக்கள்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க, நேற்று நடிகர் சிவகுமார் குடும்பம் சார்பாக 50இலட்சம் வழங்கினார்கள். நடிகர் விஜய் சேதுபதியும் 25இலட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.