கஜா புயல் அப்டேட்: ரூபாய் 50 இலட்சம் நிதி உதவியளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்!

கடந்தவாரம் டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா புயலினால் டெல்டா மாவட்டங்கள் சிதைந்து போனது. கஜா புயலின் இந்த கோர்த்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்களை அடுத்த மாவட்டகளோட இணைக்கும் சாலைகள், தொலைத்தொடர்பு வசதிகள், மின்சாரயிணைப்புகள், வீடுகள், என அனைத்தும் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து மக்கள்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

Actor-Sivakumar-Family-Donating-50-Lakhs-Gaja-Cyclone-Relief
Actor-Sivakumar-Family-Donating-50-Lakhs-Gaja-Cyclone-Relief

திரையுலகத்தினரும் தங்களால் முயன்ற சில உதவிகளை செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பற்றி இன்னும் அப்டேட் எதுவும் இல்லாதா நிலையில், நடிகர் சிவகுமாரின் (Actor Sivakumar) குடும்பத்தில் அவருடைய மகன்கள் நடிகர் சூர்யா, கார்த்தி இருவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவும் கரங்கள் மூலமாக ரூபாய் 50 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்படும் எனவும், உடனடியாக நிவாரணப்பணிகளை துவக்கவும் சம்பத்தப்பட்ட பகுதி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.