அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி63” விளையாட்டு படமா?

அட்லீயின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார் தளபதி விஜய். இதை நேற்று AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. தளபதி விஜய்யை வைத்து ஏற்கனவே தெறி, மெர்சல் என்ற இரண்டு மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த அட்லீயுடன், மெர்சலில் பணிபுரிந்த அதே டீம் இந்த படத்திலும் இணைகிறது. முக்கிய கதாபாத்திரங்களை தவிர, பாடல்கள் – விவேக் (சர்கார் பாடலாசிரியர்) இசை – ஏ.ஆர். ரகுமான், ஒளிப்பதிவு – ஜிகே விஷ்ணு, ஆர்ட் – முத்துராஜ், எடிட்டிங் – ரூபன் L அந்தோணி, ஸ்டண்ட் – அனல் அரசு..என ஒரு பக்கா மாஸ் படமாக அடுத்த வருடம் தீபாவளியன்று வெளியிட இருக்கிறார்கள். ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor-Vijay-Thalapathy63
Actor-Vijay-Thalapathy63

நேற்று மாலை 7மணிக்கு இந்த படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டார் AGS நிறுவனத்தின் தலைமை அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி. இந்த போஸ்டரை பார்த்த பிரபலங்கள் சிலர்..இப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதோ..என கருத்து தெரிவித்திருந்தார்கள். ஏன்னென்றால் தளபதி “63” என்ற எண் விளையாட்டில் வீரர்கள் அணியும் ஜெர்சி எண்ணை குறிக்கிறது.