அஜித்59: இயக்குனர் வினோத் அதிகாரபூர்வ அறிவுப்பு!

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கான தன்னுடைய டப்பிங் பணிகள் முடித்தநிலையில், தற்போது MIT மாணவர்களுக்கு ஆளில்லா விமானப்பயிற்சிகளை வழங்கிவருகிறார்.

HVinoth-Ajith-Ajith59
HVinoth-Ajith-Ajith59

இந்த நிலையில் அஜீத்தின் அடுத்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்குகிறார் என்பது முன்னரே வந்த செய்திதான். இந்த படம் பாலிவுட்டின் “பிக் பி” அமிதாப் நடிப்பில் வெளியான “பிங்க்” படத்தின் ரீமேக் என்று செய்தித்தாள்களில் செய்திகள் வந்தன. இந்நிலையில், இந்தப்படம் “பிங்க்” ரீமேக் இல்லை என இயக்குனர் வினோத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.