அமிதாப் ஏன் அந்த மாதிரி கூறினார்? எதற்கு ரஜினி சினிமாவை விட்டு விலகுகிறார்?

பாலிவூட்டில் “பிக் பி” என்றழைக்கப்படும் நடிகர் அமிதாப்..சமீபகாலமாக அரசியலுக்கு வரவிருக்கும் நடிகர்களை பற்றி அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதையொட்டி தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டதாவது,

நடிகர் சீரஞ்சீவி அரசியலுக்கு வந்தபோதே, அவருக்கு நண்பர் என்ற வகையில் நிறைய அறிவுரைகளை வழங்கினேன். இன்றைய அரசியல், பணத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து நடக்கிறது. அதனால் உங்களுக்கு அரசியல் ஒத்துவராது..வேண்டாம் என்று எவ்ளோவோ எடுத்துக்கூறினேன். ஆனால் அவர் என் வார்த்தையை காதுகொடுத்து கேட்கவில்லை.

அவரைத்தொடர்ந்து அரசியலுக்கு வர தயாராகிக்கொண்டிருக்கும் ரஜினியிடம் நான் அதே அட்வைஸை கொடுத்திருக்கிறேன். இவராவது ஏன் சொல்லை கேட்பாரா என்று தெரியவில்லை.. இந்நிலையில் நடிகர் ரஜினி தீடிரென வேற ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.