தன்னுடைய பிறந்தநாளன்று அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்ட அருண் விஜய்!

அருண் விஜய்

முதலில் இன்று பிறந்தநாள் காணும் “அருண் விஜய்” அவர்களுக்கு “டேநியூஸ்தமிழ்” சார்பாக வாழ்த்துக்கள். தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

தமிழ் சினிமாவில் வருடங்கள் மாற மாற அதற்க்கு ஏற்ப ஒவ்வொருவரின் ரசனைகளும் மாறிக்கொண்டேதான் போகிறது. அதற்க்குயேற்றார்போல நடிகர்களும் தங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒரு சிலர் தான் கதைக்கும், தங்களுடைய உடலமைப்பை தங்களுக்கு ஏற்றாற்போலும் மாற்றியமைத்து கொள்ளுவார்கள், அந்த அளவிற்கு தங்களை நம்பி எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சரி இயக்குனர்களுக்கும் சரி..தங்களால் முடிந்தளவிற்கு தங்களின் நடிப்புத்திறமைய வெளிப்படுத்துகிறார்கள். அவ்வாறு மிகச்சிறந்த நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களில் அருண் விஜய்யும் ஒருவர்.

ArunVijay-Boxer
ArunVijay-Boxer

அவர் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஆகின்றன. அவருக்கு திறமைகள் இருந்தும் ஏனோ வாய்ப்புகள் அமையவில்லை. அப்படிப்பட்ட அவருடைய வாழ்வில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் “என்னை அறிந்ததால்”. இப்படத்தில் கதாநாயனுக்கு சமமான கதாபாத்திரத்திற்கு உடைய வில்லன் வேடத்தில் “விக்டர்” என்னும் பெயரில் மிரட்டியிருப்பார். உண்மையில் சொல்லப்போனால், முதலில் இயக்குனர் கவுதம் மேனன் தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படத்தில் அருண் விஜய் அவர்களை வில்லன் வேடத்திற்கு சிபாரிசு செய்ததற்கு, அதற்கு ஏற்றத்தாற்போல் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் “அருண் விஜய்” என்ற பெயர் மறைந்து “விக்டர்” என்ற பெயர் பிரபலமாகிப்போனது. இப்படத்திற்காக எடிசன் அவார்ட், சிம்கா அவார்ட், பிலிம்பேர் அவார்ட் என அவருக்கு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்..வில்லன் என பன்முகங்களை பெற்றுக்கொடுத்தது.

“என்னை அறிந்தால்” படத்திற்கு முன்பு, இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் வெளியான “தடையாரத் தாக்க” படத்திலும் மிரட்டியிருப்பார். சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “செக்க சிவந்த வானம்” படத்தில் கூட மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

இந்த வருடம், அவருக்கு “செக்க சிவந்த வானம்” சிறந்த படமாக அமைந்தது. இது போல அடுத்தவருடமும் அவருக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். விரைவில்..மகிழ் திருமேனியின் “தடம்” படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் ப்ரதர்.

தடம் ட்ரைலர்: