96 படத்தின் இசையப்பாளருடன் இணைந்த இயக்குனர் மணிரத்னம்!!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் மணிரத்னமும் ஒருவர். அவருடைய ஆரம்பகால படங்களில் பெரும்பாலும் இசைஞானி இளையராஜாவுடன் தான் இருக்கும்..அதற்க்கு பிறகு காலங்கள் மாற மாற ரோஜா படங்களில் இருந்து இசையப்பாளர் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்தார். அண்மையில் வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் வரையில், இவர் இயக்கும் படங்களில் என்றுமே ஏ.ஆர்.ரகுமான் தான். ஆனால் விஜய் சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் அன்மையில் வெளிவந்து கமர்சியல் வெற்றி கொடுத்த 96 படத்தின் இசையப்பாளர் கோவிந்த் வசந்தா உடன் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்தப்படத்தில் மணிரத்னம் கதை எழுதுகிறார். இந்தப்படத்தை தனசேகரன் இயக்குகிறார். இந்த செய்தியை கோவிந்த் வசந்தா அவருடைய இன்ஸ்டா அக்கௌன்ட்டில் பதிவிட்டுள்ளார்.

இசையப்பாளர் கோவிந்த் வசந்தா தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற பிரபலமான மியூசிக்கல் பேண்ட் குழுவில் ஒருவர் ஆவார். அந்த மியூசிக்கல் பேண்டில் அவர் நிறைய ஆல்பங்களை வழங்கியுள்ளார். கோவிந்த் வசந்தாவின் முதல் தமிழ் படம் இயக்குனர் பீஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “சோலோ” படமாகும்.

அதற்கு பிறகு அறிமுக இயக்குனர் மருத பாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த “அசுரவதம்” படத்தில் இசையில் மிரட்டியிருப்பார். அந்த படத்திற்க்கு பிறகு அதிகமாக மக்கள் ரசித்த படம் 96. இதில் வரும் பின்னணி இசை..பாடல்கள் என அனைத்தும் படத்திற்கு பிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்கா அமைந்தது. கோவிந்த் வசந்தாவின் இசையில் அடுத்த வரவாக விரைவில் வெளிவராயிருக்கிறது விஜய் சேதுபதியின் 25வது படமான “சீதக்காதி”. இவரின் இசையில் இப்படமும் வெற்றியடைந்து மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.