மீண்டும் இணைகிறார்களா தல, தளபதி! அதுவும் வெங்கட் பிரபுவின் மங்காத்தா 2?

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய் மற்றும் அஜித்துக்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் “ராஜாவின் பார்வையிலே”. இந்த படம் வெளியாகி இருபது வருடங்களுக்கு மேலாகிறது. இந்த படத்திற்க்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா..? என்பது அவ்வப்போது சிலருக்கு தோன்றும் கேள்விகள்..அப்படி ஒரு ரசிகர்கருக்கு தோன்றிய கேள்விக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். அவர் அதற்கு பதில் கூறும் முன்பு அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

Ajith-Vijay-Rajavin Parvaiyile
Ajith-Vijay-Rajavin Parvaiyile

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 2011ம் வருடம் அஜித்தின் 50வது படமாக வெளியான படம் “மங்காத்தா”. இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இணைந்து நடித்திருப்பார்.

இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பல ரசிகர்களையும் ரசிக்க வைத்தது. இந்த படம் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்பது பலதரப்பட்ட ரசிகர்களின் ஏக்கமாக இருந்து வந்தது. அதுவும் அப்படி இரண்டாம் பாகம் உருவாகும் பட்சத்தில் அதில் அஜித்துடன் விஜய் நடிப்பார் என பரவலாக பேசப்பட்டது.

Mankatha 2
Mankatha 2

ஆனால் அதன்பிறகு அவர்கள் இருவரும் அவரவர் படங்களில் நடிப்பதில் பிசியாகி விட்டதால் இந்த கூட்டணி இணையாமல் போனது ஆனாலும் ரசிகர்கள் அவ்வப்போது வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா-2 பற்றி கேட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படி ஒரு ரசிகர் மங்காத்தா 2 பற்றி அவரிடம் கேட்டுள்ளார், அதற்கு அவர் என்ன பதில் கூறியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்.