கஜா புயல்: மரங்களை அறுக்கக்கூடிய 10 Chain Saw இயந்திரங்களை வழங்கிய நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்!

டெல்டா மாவட்டங்களில் புயல் வேகத்தில் சீரமைப்பு பணிகள் அங்கங்கு வேகமாக நடந்து வருகின்றன. சினிமா பிரபலங்களும் தங்கள் பங்குக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அண்மையில் நடிகர் சிவகுமார் குடும்பம் சார்பில் கூட சூர்யா (Suriya), கார்த்தி, ஜோதிகா என அனைவரின் சார்பில் ரூபாய் 50இலட்சம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Gaja-Cyclone-Suriya-Fans-Club
Gaja-Cyclone-Suriya-Fans-Club

இது மட்டுமில்லாமல் அவரின் ரசிகர்களும் அவர்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். “சூர்யா பேன்ஸ் கிளப்” என்ற ரசிக மன்றம் சார்பில் 10 Chain Saw இயந்திரங்களை வாங்கி கஜா புயலால் பாதிப்படைந்த டெல்டா மாவட்டங்களில் அங்கங்கு சாலைகளுக்கு இடையூறாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்புறப்படுத்தும் விதமாக இந்த முயற்சிகளை எடுத்துள்ளார்கள்.