கஜா புயலால் (Gaja Cyclone) பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் பற்றும் வீடுகளை இழந்து வாடும் மக்களுக்களுக்கு தேவையான முதலுதவிகளை தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவும் ஆதரவுக்கரம் நீட்டிவருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு பேருந்துகளில் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம் என்று அறிவித்திருந்தது.

இதே போல இன்று ஆம்னி பஸ் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை தேவையான நிவாரண பொருட்களை சென்னையிலிருந்து இலவசமாக எடுத்து செல்லலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். தொடர்புக்கு : 81480 45678, 044-42818348 – அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்