ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டுவென்ட்டி20 கிரிக்கெட் போட்டி நாளை கப்பாவில் தொடங்குகிறது.

கடந்த வாரம், ஆஸ்திரேலிய புறப்பட்டுச்சென்றது இந்திய கிரிக்கெட் அணி. அங்கு மூன்று டி-20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளும், நான்கு டெஸ்ட் போட்டி தொடர்களிலும் பங்குகொள்கிறது. நாளை ப்ரிஸ்பேனில் உள்ள கப்பா விளையாட்டு மைதானத்தில் முதலாவது டி-20 போட்டி துவங்குகிறது.

India-Australia-1stT20
India-Australia-1stT20

நாளை நடைபெற உள்ள முதலாவது டி-20 போட்டிக்கான விராட் கோலி தலைமையிலான 12பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய அணி விபரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், க்ருனல் பாண்டியா, குல்தீவ் யாதவ், புவ்னேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, சாஹல்.