ஆஸ்திரேலியா சென்றது இந்திய கிரிக்கெட் அணி!

இந்திய கிரிக்கெட் அணி கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக உள்ளூரில் தான் விளையாடி வருகிறது. சமீபத்தில் கூட மேற்கிந்திய தீவுகளுக்கான ஒருநாள், டுவென்ட்டி20 போட்டிகளில் விளையாடி தொடரை கைப்பற்றியது.

Team India-BCCI-Australia Tour 2018
Team India-BCCI-Australia Tour 2018

இந்நிலையில், அடுத்தவருடம் மே மாதம் உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் இந்திய அணி..ஆஸ்திரேலியாவில் மூன்று டுவென்ட்டி 20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதற்கான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச்சென்றது.

முதலில், இருபது ஓவர் போட்டிகளும், அதன் பின் டெஸ்ட் போட்டிகளும், கடைசியில் ஒருநாள் போட்டிகளும் நடைபெறும். முதல் இருபது ஓவருக்கான போட்டி வரும் 21ம் தேதியன்று பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

டுவென்ட்டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டுவென்ட்டி 20 தொடர் அணி விபரம்: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரி‌ஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், க்ருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

டெஸ்ட் தொடர் அணி விபரம்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ரகானே, புஜாரா, முரளி விஜய், கே.எல்.ராகுல், பிரித்வி ஷா, விஹாரி, ரி‌ஷப் பண்ட், பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா.