IPL 2019: “மீண்டு”ம் வருகின்றனர் ஆஸ்திரலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர்!

அடுத்தவருடத்திற்க்கான ஐபில் தொடரில் விளையாடுவதற்காக வருகின்றனர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர். கடந்தவருடம் கேப்டவுனில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாற்றில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பௌலர் பான்க்ராப்ட் ஆகிய மூன்று பேர் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடத் தடைவிதித்தது. இதில் பௌலர்க்கு மட்டும் 9 மாதங்கள் தடைவிதித்து.

Steve Smith-David Warner-IPL2019
Steve Smith-David Warner-IPL2019

இந்நிலையில் அடுத்தவருடத்திற்கான ஐபில் தொடருக்கான வீரர்கள் தேர்வு குறித்து நடந்த கலந்தாய்வில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உன்கட்டை வெளியேற்றியது. அதற்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித்தை தக்கவைத்து கொண்டது. இதில் விஷயம் என்னவென்றால் கடந்த வருட ஏலத்தில் ஜெயதேவ் உன்கட்டை 11.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டி ஆர்கி, பென் லாஹின் மற்றும் தென் ஆப்ரிக்கா விக்கெட் கீப்பர் ஹென்றிச் க்ளாஸன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைத்துக்கொண்டது.