குஷி2: விஜய்யுடன் மீண்டும் நடிப்பேன். – ஜோதிகா

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்கத்தில் கடந்த 2000ம் வருடம் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் “குஷி”. இந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்று கூட சொல்லலாம். ஒருவரியில் கதையைப்பற்றி சொன்னால், காதலர்களுக்குள் நடக்கும் சண்டை, ஈகோ பிரச்சன்னைகள் தான். இப்படம் அனைத்து தரப்பட்ட ரசிகர்களுக்கும் பிடித்தது. வசூலிலும் பட்டையை கிளம்பியது.

Vijay-Jyothika-Kushi2
Vijay-Jyothika-Kushi2

இந்நிலையில், ஜோதிகா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள படம் “காற்றின் மொழி”. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேளைகளில் இருந்தபொழுது சில பத்திரிகையாளர்கள், குஷி இரண்டாம் பாகம் எடுத்தால் விஜய்யுடன் நீங்கள் மறுபடியும் நடிப்பீர்களா..? (குஷு படம் வெளிவந்து 18 வருடங்களாகிறது) இந்த கேள்விக்கு ஜோதிகாவின் பதில், அப்படி உருவானால் கண்டிப்பாக நடிப்பேன், ஆனால் ஒரு கண்டிஷன் கதைக்கு என்னுடைய கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Kushi2

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே குஷி 2 இரண்டாம்பாகம் எடுப்பது பற்றி அப்பவே பேச்சு அடிபட்டது. ஆனால் அப்பொழுது விஜய் நடித்த கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. அவர்கள் இருவரும் இருப்பது போன்று போஸ்டர் கூட வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.