“மௌனகுரு” இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்தபடத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது!

இயக்குனர் சாந்தகுமார்

இவர் இயக்குனர் தரணி மற்றும் இன்னும் சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அடுத்த கட்டமாக இயக்குனராக கடந்த 2011ம் வருடம் அவதாரம் எடுத்தார். அவரின் முதல் படத்திற்கு முன்னணி நடிகர்கள் நிறைய பேரை அணுகி, அவர்கள் அனைவரும் தவிர்த்த அந்த கதை, நடிகர் அருள்நிதிக்கு பிடித்து அவருடைய தந்தையின் தயாரிப்பு நிறுவனமான மோகனா மூவிஸ் தயாரிப்பில் உருவான படம் தான் “மௌனகுரு”.

Mounaguru-Santhakumar
Mounaguru-Santhakumar

“மௌனகுரு” வெளியாகி கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்துள்ளார். தன்னுடைய 2வது படத்தை “ஸ்டூடியோ கிரீன்” ஞானவேல்ராஜா தயாரிப்பில் “ஆர்யா” நடிக்கிறார். இன்று இப்படத்திற்கான பூஜை தொடங்குகிறது.

அருள்நிதி

இப்படம் நடிகர் அருள்நிதி வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.அந்த அளவிற்கு படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக அமைந்தது. படத்தின் கதையைப்பற்றி சுருக்கமாக சொன்னால், ஒரு ஆக்ஸிடன்ட். அதைத் தொடர்ந்து நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் …விருவிருப்பானக் காட்சிகள் என மிக அருமையாக திரைக்கதை உருவாக்கியிருப்பார்கள்.

இந்தப்படம் கடந்த 2011ம் வருடம் வெளிவந்தது. இதற்கு பிறகு இது கன்னடத்தில் “குரு” என்ற பெயரில் 2012ம் வருடம், “சங்கரா” என்ற பெயரில் 2016ம் வருடம், அதே 2016ம் வருடத்தில் ஹிந்தியில் நம்முடைய “சர்கார்” இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “அகிரா” வை இயக்கினார்.

ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழ் சினிமாவில் என்றில்லாமல் இந்திய சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவர். அவரே இந்த (மௌன குரு) படத்திற்கு அடிமையானார். அந்த படத்தை பற்றிய அவருடைய கருத்து, மௌனகுரு படம் எனக்கு பிடித்தப்படம் மட்டுமல்ல என்னை வேறு விதமாக சிந்திக்க வைத்த படம் என்று கூறிய அவர், அப்படத்தின் கருவை வைத்து அதை ஹிந்தியில் “அகிரா” என்ற பெயரில் சோனாக்ஷியை சின்கா வைத்து எடுத்திருந்தார். அப்படி எடுத்த அந்த படமும் இந்தியில் சக்கை போடு போட்டு வசூலில் பட்டையை கிளப்பியது.