இலவச பொருட்கள் வேணாம்னு சொன்னா…நாங்க கண்டிப்பா தருவோம் – RJ பாலாஜியின் LKG!

தமிழ் சினிமாவில் தற்போது எல்லாம் மக்களின் பிரச்சனைகளை பற்றி ஏகப்பட்டோர் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் ஆனா விவசாயத்திலிருந்து, மீத்தேன், வங்கியிலிருந்து கடன் வாங்குவது, இலங்கை ராணுவம் நம் மீனவர்களை சுட்டு கொள்ளுவது, நதிநீர் பிரச்னை..இப்படி ஏகத்துக்கும் அடிக்கி கொண்டே போகலாம். அப்படி சமீபத்தில் மக்களின் பிரச்சனைகளை பற்றி எடுக்கப்பட்ட படங்களான இரும்புத்திரை, மெர்சல் மற்றும் சர்கார் படங்களை கூட கூறலாம்.

RJBalaji-LKG-Poster-Sarkar
RJBalaji-LKG-Poster-Sarkar

கடந்த தீபாவளியன்று சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் சர்கார். இப்படத்தில் கூட மக்களின் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது…எங்களுக்கு இலவசம் வேண்டாம். என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதுவே படத்திற்க்கு பப்ளிசிட்டியாகியும் போனது. இந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு நிறைய ரசிகர்கள் மற்றும் மக்கள்கள் சிலர் இலவச பொருட்களை தூக்கி எறிந்தும்..தீயிட்டு கொளுத்தியும் தங்களுடைய எதிர்ப்பை காட்டினார்கள்.

😛😛😛😛#Pradeep

Posted by Phone Wire Pinchi Oru Vaaram Aachu on Wednesday, November 14, 2018

இது ஒருபுறம் இருக்க, புதுமுக இயக்குனர் பிரபு இயக்கத்தில் RJ பாலாஜி நடிக்கும் “LKG” படத்தின் நீயு போஸ்டர் இன்று வெளியானது. படத்தின் போஸ்டரே கலக்கட்டியுள்ளது. படப்போஸ்டரில் இலவச வேட்டி சேலையோடு பொங்கலுக்கு வருகிறோம்…என்று இலவசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் RJ பாலாஜி அரசியல் கட்சி சார்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படம் பொங்கலன்று வெளியாகயிருக்கிறது. இதை போஸ்டரிலேயே காட்டியுள்ளார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக RJ பாலாஜி தனது ட்விட்டில் “விஸ்வாச”மான நம்ம “பேட்ட” மக்களுக்கு ஒரு நற்செய்தி.! என ட்விட்டை பதிவிட்டுள்ளார். ஆக விஸ்வாசம், பேட்ட என்ற இரண்டு மிகப்பெரிய பட்ஜெட் படங்களுடன் பொங்கலுக்கு களமிறங்குகிறது இந்த LKG.