முதல் முறையாக தன்னுடைய “குரு” பத்மஸ்ரீ கமல்ஹாசனுடன் இணைகிறார் சிம்பு!

தமிழ் சினிமாவில், அதுவும் சமீபகாலமாக கோலிவுட்டில் என்னதான் நடக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த மாதங்களில் மல்டி ஸ்டார்களுடன் வெளியான செக்க சிவந்த வானம் பாக்ஸ் ஆஃபீசில் சக்கை போடு போட்டு பட்டையை கிளப்பியது. அதே போன்று மறுபடியும் மல்டி ஸ்டார்களுடன் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2வில் பத்மஸ்ரீ கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் சிம்பு. சிம்பு இதற்கு கண்டிப்பாக சம்மதம் சொல்லுவார் என எதிர்பார்ப்பில் இருக்குறது டீம். ஏனென்றால் சிம்புவின் மானசீக குரு கமல்ஹாசன் என்பதால்,

Kamal-Simbu-Indian2
Kamal-Simbu-Indian2

சங்கரின் இயக்கத்தில் “இந்தியன் 2” வை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. முதன் முறையாக உலக நாயகனுக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த கூட்டணியில் ஏற்கனவே நயன்தாரா மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது முன்னரே வந்த செய்தி. இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் அதிகாரபூர்வமாக அனைத்து கதாபாத்திரங்களையும் அறிவிக்கயிருக்கிறார்கள்.

செக்க சிவந்த வானத்திற்கு பிறகு, லைக்கா தயாரிப்பில் சுந்தர் சி யின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “வந்த ராஜாவாதான் வருவேன்” படம் முடிந்து, வருகின்ற பொங்கலன்று வெளியாகிறது. இதில் சிம்புக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கிறார்கள். இதற்கு பிறகு சிம்பு, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் “மாநாடு” என்னும் படம் பண்ணுகிறார்கள். இது அடுத்த வருடம் தொடங்குகிறது.