ராஜமௌலியுடன் இணைந்து பாலிவுட்டிற்கு செல்லும் பிரின்ஸ் மகேஷ் பாபு

எஸ் எஸ் ராஜமௌலி

ஹாலிவுட்டில் பிரமாண்டமாக படம் எடுக்கக்கூடியவர்களில் ஏகப்பட்டபேர் இருக்கிறார்கள். ஆனால் நம்மக்கு சட்டுயென்று நினைவுக்கு வருவது டைட்டானிக், அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தான். அதேபோல இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக எடுக்கக்கூடிய இயக்குனர்களில் எஸ் எஸ் ராஜமௌலியும் ஒருவர், இவரின் படங்கள் அனைத்தும் அவரின் பெயருக்கு ஏற்றார் (“ராஜ”மௌலி) போல…இருக்கும். அந்த வகையில் மன்னர் சாம்ராஜியங்களை வைத்து எடுத்த படங்களான பாகுபலி, பாஹுபலி 2 இரண்டும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று…உலக சினிமாவில் தென்னிந்தியா சினிமாவையே ஒருபடிக்கு மேலாக கொண்டு சென்றது.

SSRajamouli-MaheshBabu
SSRajamouli-MaheshBabu

மகேஷ் பாபு

இந்நிலையில், இவர் தெலுங்கு நடிகர் / சூப்பர்ஸ்டார் பிரின்ஸ் மகேஷ் பாபுவை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படமெடுக்கப் போகிறார் என்பது அண்மையில் வந்த செய்தி. இதன் மூலம் இருவரும் இணைந்து பாலிவுட்டில் முதன் முதலாக அடியெடுத்து வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இருவரும் சந்தித்துக்கொண்ட போது இதைப்பற்றிய பேச்சு அடிபட்டுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இன்னும் பெயர் வைக்ககப்படாத புதிய படமான படம் “RRR”. இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் NTR என இருவரும் நடிக்கிறார்கள். “RRR” என்பதின் விரிவாக்கம் “ராம ராவண ராஜ்யம்” எனவும், இது ராமாயணத்தை பின்னி எடுக்கப்படுகிறது எனவும் கூறுகிறார்கள். இப்படத்தில் யார் யார் எந்த கதாபாத்திரம் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இப்படம் முடிந்த பிறகு, மகேஷ் பாபுவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.