ஊடகங்களில் கசிந்த செய்தி, வருத்தத்தில் அஜித்

மும்பையில் அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு நடந்த வேளையில், அங்கு ஒரு நடன காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர். அந்த நடனக்குழுவில் நடனமாடிய 42வயதான ஒரு நடன கலைஞரும் நடனமாடினார். அப்படி ஆக்ரோஷமாக நடனமாடும் பொழுது அவருடைய உடலில் ஏற்பட்ட ஒருவித பதட்டத்தினால் மயங்கி விழுந்துவிட்டார். உடனே அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டார். ஆனால் அவரது நிலைமை மிக மோசமாகிவிட்டதால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. சரவணன் என்னும் அந்த நடன கலைஞர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

Thala-Ajith-Upset
Thala-Ajith-Upset

இந்தநிலையில், விஸ்வாசம் படத்தின் டப்பிங் பணிகளில் சென்னையில் இருந்த நடிகர் அஜித், தனக்கு இருந்த கமிட்மெண்ட்ஸ் எல்லாத்தையும் தள்ளிவைத்துவிட்டு, அவர் இறந்த செய்தி கேள்வி பட்டவுடன் உடனடியாக மும்பை விரைந்தார். அங்கு அவருடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக்கொண்டு, அவருடைய உடலை சென்னை கொண்டுவருவதற்க்கான அனைத்து செயல்களையும் செய்து கொடுத்தார். அதே போல் கடந்த ஞாயிறு அன்று அவரின் உடல் விமானம் மூலம் சென்னையை வந்ததடைந்தது. அது மட்டுமின்றி அவரின் உடல் தகனத்திலிருந்து, அவரை இழந்து வாடும் அவருடைய குடுப்பதினாருக்கும் பண உதவி செய்துள்ளார்.

இந்த செய்தி, சில ஊடகங்களில் கசிந்ததால் இதைப்பற்றி நடிகர் அஜித் மிகுந்த வருத்தமடைந்தார். அவர் கூறியதாவது அந்தக் கலைஞருக்கு இது ஒரு துரதிஸ்டவசமான சம்பவமாகும். இதை நாம் கவனிக்க தவறிவிட்டதாக எண்ணுகிறேன். என்னுடைய படப்பிடிப்பில் இருக்கும் அனைவரும் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் போல… அதனால் அவருடைய குடும்பத்திற்கு என்னால் ஆன சிறிய உதவியை செய்தேன். என்று அவருடைய தரப்பிலுள்ளவர்கள் கூறுகிறார்கள்.