பட்டாசு வெடிக்க எங்களுக்கு கூடுதல் நேரம் வேண்டும்..உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம் ஆன்லைன் விற்பனை செய்ய தடைவிதித்தது. மேலும் பட்டாசு வெடிப்பது தொடர்பாக சில கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்தது. அந்த விதிமுறைகளில் ஒன்று இரவு 8மணியிலிருந்து 10மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது. இதே போல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளின் போதும் இரவு 11:30 மணி முதல் இரவு 12:30 மணி வரை மட்டுமே வெடி வெடிக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.

Firecrackers-Diwali
Firecrackers-Diwali

இது பட்டாசு விற்பனை செய்பவர்களிடமும்..உற்பத்தி செய்பவர்களிடமும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் மூலம் பட்டாசு தொழிலையே நம்பியுள்ள எண்ணற்ற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். மேலும் சிலர் உச்சநீதிமன்ற கருத்து சரி என்கிறார்கள்..இப்படி தடை செய்வதன் மூலம் ஒலி மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்று..இது ஒருபுறம் இப்படிருக்கையில்…தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தீடிரென ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் (காலை 4 – 6) ஒதுக்கவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளது.