“கஜா” புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 25 இலட்ச ரூபாய் மதிப்பில் நிவாரணப்பொருட்களை வழங்குகிறார் – விஜய் சேதுபதி

தமிழகத்தையே கடந்தவாரம் உலுக்கிய புயல் “கஜா”. அதுவும் டெல்டா மாவட்டங்களையே அடுத்து துவம்சம் செய்துவிட்டு போய்விட்டது. கடந்த 14ம் தேதி மாலை நாகப்பட்டினதிலிருந்து 160கிலோமீட்டர் தொலைவிலிருந்து புயல், நன்றாக வலுப்பெற்று அன்று இரவு கரையைக்கடக்கும் என்று வானிலைமைய அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

VijaySethupathi-Donates-25Lakhs-GayaCyclone
VijaySethupathi-Donates-25Lakhs-GayaCyclone

அன்று இரவு நாகை, வேளாங்ககண்ணி, வேதாரண்யம் அருகே கரைய கடந்த கஜா புயலின் கோரதாண்டவத்தால், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர்..என டெல்டா மாவட்டங்கள் முழுவதும் முற்றிலும் சிதைந்து போனது. “வேதாரண்யம்” நாகை மாவட்டத்திலிருந்து பிரிந்து தனித்தீவு போல ஆகிவிட்டது. அந்த அளவிற்கு ஏகப்பட்ட பொருட்சேதங்களும், உயிர் சேதங்களுக்கும், தங்கள் பிள்ளைகள் போல வளர்த்த ஆடு, மாடுகளும், விவசாய நிலங்கள், தென்னந்த்தோப்புகள், வீடு…என அனைத்தையும் இழந்து வாடுகிறார்கள்.

அவர்களுக்கு தேவையவற்றை அங்கங்கு தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களுக்கும், அரசு ஒருபுறம் சேவை செய்து கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் இருந்து நடிக, நடிகைகள் வரை இயன்ற அளவிற்கு மக்களுக்கு உதவிடுங்கள் என்றும் ஒருபுறம் அவர்களால் முடிந்த உதவிகளையும் பண்ணிவருகிறார்கள்.

அந்த வகையில், “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 இலட்ச ரூபாய் மதிப்பில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறார்.